அம்மன் கோயில்களில் ஆடி முதல் வெள்ளி' கோலாகலம்

ஆற்காட்டை அடுத்த கலவையில் உள்ள கமலக்கண்ணி அம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.விழாவை முன்னிட்டு, அதிகாலை கலவை சச்சிதானந்த சுவாமி தலைமையில்

ஆற்காட்டை அடுத்த கலவையில் உள்ள கமலக்கண்ணி அம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, அதிகாலை கலவை சச்சிதானந்த சுவாமி தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. அங்கு மூலவருக்கு பாலபிஷேகமும், உற்சவருக்கு புஷ்ப அர்ச்சனையும் நடைபெற்றன. மாலையில் சக்தி கரகம் சந்நதி ஊர்வலமும், இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதிஉலாவும் நடைபெற்றது.
விழாவில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மகாதேவமலை மகானந்தசித்தர், சித்தஞ்சி மோகனந்த சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம், ஜூலை 21: குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய 250-க்கும் மேற்பட்ட பால்குடங்கள் சனிக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
இக்கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, அன்று மாலை அம்மனுக்கு திருக்கல்யாணமும், திருமண விருந்து அளித்தலும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை கூழ்வார்த்தலும், போடிப்பேட்டையில் இருந்து கரக ஊர்வலமும் நடைபெற்றன. சனிக்கிழமை காலை கோபலாபுரம் கெங்கையம்மன் கோயிலில் இருந்து பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு பூப்பல்லக்கும், வீதி உலாவும் நடைபெற்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கோயில் தலைவர் வி.பி. தாமோதரன், செயலர் பி. மோகன், பொருளாளர் கே.சுகுமாரன், துணைத் தலைவர் என். பன்னீர்செல்வம், துணைச் செயலர்கள் எம்.செல்வம், எம்.லட்சுமணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com