பழனி ஆண்டவர், அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பழனி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பழனி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் கலசங்கள் அமைத்து யாக பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் கோபுர விமானத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் கருவறையில் மூலருக்கு சிறப்பு மகா தீபாரானை நடைபெற்றது. விழாவில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கோயில் திருப்பணிக்குழுத் தலைவர் 
கு.சரவணன், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், புலவர் முத்துகுப்புசாமி, பாஸ்கரன், தொழிலதிபர் ஆர்.எஸ். சேகர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
பின்னர், கங்காதர ஈஸ்வரர் கோயிலில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் தேரில் பஞ்சபூத பார்வை நிலை நிறுத்தும் பணியை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில், திருப்பணிக் குழு நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தான்தோன்றி அம்மன் கோயிலில்...
குடியாத்தம்,  ஜூன் 17: குடியாத்தம் செதுக்கரையில் உள்ள ஸ்ரீதான்தோன்றி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுமார் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இக்கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, யாக சாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின. 
ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜைகள், மகா சங்கல்பம், யாத்ரா தானம், கலசப் புறப்பாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சுமார் 1,000 பேருக்கு அன்னதானம்  செய்யப்பட்டது.
கம்பன் கழகத் தலைவர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், நிறுவனர் ஜே.கே.என். பழனி, செயலர் கே.எம்.பூபதி, பிரமுகர்கள் 
எஸ். சேட்டு, எஸ். ராஜ்குமார், ஆர். செல்வம், ஏ. ரவிச்சந்திரன், ஜே.கே.என். மொகிலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோயில் நிர்வாக அதிகாரி மா. குணசேகரன், ஆய்வாளர் அ. மேகலா, செதுக்கரை  பொதுமக்கள்,  இளைஞர்கள்  உள்ளிட்டோர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com