வேலூரில் ரூ.2.45 கோடியில் பளுதூக்கும் மையம்: முதல்வர் திறந்து வைத்தார்

வேலூரில் ரூ. 2.45 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பளு தூக்கும் மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். 

வேலூரில் ரூ. 2.45 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பளு தூக்கும் மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். 
வேலூரில் பளு தூக்கும் மையம் அமைக்கப்படும் என கடந்த 2016-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதையடுத்து அதே ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வேலூர் சத்துவாச்சாரியில் ரூ. 2.45 கோடி செலவில் புதியதாக பளு தூக்கும் மையம் கட்டும் பணி தொடங்கியது. இப்பணி நிறைவடைந்ததை அடுத்து பளு தூக்கும் மையத்தின் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, செவ்வாய்க்கிழமை காணொலி காட்சி மூலமாக புதிய பளு தூக்கும் மையத்தை திறந்து வைத்தார். இதில், ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், வட்டாட்சியர் பாலாஜி, செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் தான் முதல்முறையாக பளு தூக்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு தேசிய, சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தும் அளவுக்கு 3 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
அதிநவீன பயிற்சி உபகரணங்கள், குளிர்சாதன வசதி கொண்ட அறைகளும் உள்ளன. இங்கு மாவட்ட அளவில் 25 வீரர், 25 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, தங்கி பயிற்சிப் பெற உள்ளனர். வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கு தனித்தனி அறைகளும் உள்ளன. இங்கு தேசிய, சர்வதேச அளவிலானப் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் அனுப்பும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com