அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு  ஆங்கில வழி பயிற்சி தொடக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில வழி கற்பித்தல் பயிற்சி வகுப்பு வேலூர் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில வழி கற்பித்தல் பயிற்சி வகுப்பு வேலூர் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வெள்ளிக்கிழமை வரை 4 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் ஆங்கில உச்சரிப்பு, இலக்கணம், கற்பிக்கும் முறைகள் குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 
இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் துணைத் தலைவர் என்.ஜனார்தனன் தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் என்.ரமேஷ், மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவன முதல்வர் பஷிர்அகமது ஆகியோர் பயிற்சியைத் தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் எம்.ஞானசேகரன்  வரவேற்றார்.
இப்பயிற்சியில் அணைகட்டு, கணியம்பாடி, வேலூர் நகரம், புறநகர், காட்பாடி, மு.ஏ.குப்பம், சோளிங்கர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள அரசு  நடுநிலை, தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 120 ஆங்கிலப் பாட ஆசிரியர்கள் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனர். 
அனைத்து ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக கணினி ஒதுக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 
இப்பயிற்சியில் ஜோலார்பேட்டை அனைவருக்கும் கல்வித் திட்ட பயிற்றுனர் பி.வசுமதி, அணைக்கட்டு ஒன்றியம், கீரைக்குட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் தீனதயாளன், நெமிலி ஒன்றியம் உள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உதவிஆசிரியர் சம்பத், வாலாஜாபேட்டை ஒன்றியம் நடுநிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் பாரதிபிரியா ஆகியோர் கருத்தாளர்களாகவும், ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஆ.சுரேஷ்குமார் பயிற்சி ஒருங்கிணைப்பாளராகவும்  செயல்பட்டனர்.  
இதற்கான ஏற்பாடுகளை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரிப் பேராசிரியர் யோகானந்தன் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com