அரசுப் பள்ளிகளில் திறந்தவெளிக் கிணறுகள்: மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுரை

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் மின்இணைப்பு செல்லும் பகுதிகள் பாதுகாப்பான நிலையில்

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் மின்இணைப்பு செல்லும் பகுதிகள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் பள்ளி வளாகங்களில் ஆங்காங்கே மின்இணைப்பு செல்லும் பாதைகள், பயன்படுத்தப்படாத பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள மாவட்ட கல்வித் துறை அலுவலர்களுக்கு மாநில கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. 
இதற்காக மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக். பள்ளி ஆய்வாளர்களைக் கொண்டு குழு அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இக்குழுவினர் அனைத்துப் பள்ளிகளிலும் திறந்தவெளிக் கிணறுகள், மின்இணைப்பு செல்லும் பகுதி, கழிவுநீர்க் கால்வாய் குழிகள் மூடியநிலையில் குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் அமைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 
ஆய்வின் போது பள்ளி அருகே பாதுகாப்பில்லாத வகையில், கழிவுநீர்த் தொட்டிகள், மின்இணைப்புகள், கிணறுகள் காணப்பட்டால் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com