"உணவு தானியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்'

மத்திய அரசு ஜிஎஸ்டி  வரியை உணவு, தானியப் பொருள்களுக்கு முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று குடியாத்தம் நெல், அரிசி வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

மத்திய அரசு ஜிஎஸ்டி  வரியை உணவு, தானியப் பொருள்களுக்கு முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று குடியாத்தம் நெல், அரிசி வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
இச்சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் குடியாத்தம் ராம் நகர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் பி.என்.எஸ்.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். இணைச் செயலர் என்.இ. கிருஷ்ணன் வரவேற்றார். 
பொருள்கள் மீது மிக அதிக அளவில் உள்ள ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைத்து, வணிகர்களும் எளிமையாக அமல்படுத்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். உணவு தானியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் நீர் ஆதாரம் பெருகுவதற்கும், விவசாயிகள் பயிர் செய்வதற்கும் உகந்த வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும். 
தமிழகத்தில் சொத்து வரி மிக அதிக அளவில் முன் தேதியிட்டு உயர்த்தி இருப்பதை ரத்து செய்ய வேண்டும். மே மாதம் 5-ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்  நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு: சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக என்.இ. கிருஷ்ணன், கௌரவத் தலைவராக பி.என்.எஸ். திருநாவுக்கரசு, துணைத் தலைவராக எம். விநாயகம், செயலாளராக டி. ராஜேந்திரன், பொருளாளராக என். ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com