காவிரி விவகாரம்: தமாகா ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் வேலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் வேலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநகர இளைஞரணி தலைவர் பால
கணேஷ் தலைமை வகித்தார். 
மத்திய மாவட்டத் தலைவர் பி.எஸ்.பழனி, மேற்கு மாவட்டத் தலைவர் குப்புசாமி, கிழக்கு மாவட்டத் தலைவர் அரிதாஸ், மாநகரத் தலைவர் மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், அதற்கு தமிழக அரசு நிர்பந்தம் அளிக்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், அரியூர் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், இளைஞரணி மாநிலச் செயலர் சிவானந்தம், ஆர்தர் சதானந்தம், இளைஞரணித் தலைவர்கள் தினகரன் (வேலூர் மத்திய மாவட்டம்), புவனேஸ்வரன் (மேற்கு மாவட்டம்), சுந்தர் (கிழக்கு மாவட்டம்), அரக்கோணம் நகரத் தலைவர் கே.வி.ரவிசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com