10-ஆம் வகுப்புத் தேர்வு: மாவட்டத்தில் 88.84 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில் மீண்டும் கடைசி இடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வேலூர் மாவட்டத்தில் 88.84 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் 0.07 சதவீதம் சரிந்திருப்பதுடன், மாநில அளவிலான தேர்ச்சி விகத்தில்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வேலூர் மாவட்டத்தில் 88.84 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் 0.07 சதவீதம் சரிந்திருப்பதுடன், மாநில அளவிலான தேர்ச்சி விகத்தில் இந்த மாவட்டம் மீண்டும் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை 323 அரசுப் பள்ளிகள் உள்பட வேலூர் வருவாய் மாவட்டத்தில் மொத்தமுள்ள 625 பள்ளிகளில் இருந்து 25,199 மாணவர்கள், 25,539 மாணவிகள் என மொத்தம் 50,738 பேர் எழுதினர். புதன்கிழமை வெளியிடப்பட்ட தேர்வு முடிவில், 21,447 மாணவர்கள், 23,631 மாணவிகள் என மொத்தம் 45,078 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில், மாணவர்கள் 85.11 சதவீதம் பேரும், மாணவிகள் 92.53 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றதன் மூலம் இம்மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 88.84 சதவீதமாகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 88.91 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு 0.07 சதவீதம் சரிந்திருப்பதுடன், தேர்ச்சி விகிதத்தில் வேலூர் மாவட்டம் தொடர்ந்து 2-ஆம் ஆண்டாக கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்: மாவட்டத்தில் மொத்தமுள்ள 323 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 25,709 மாணவ, மாணவிகள் தேர்வெழுதியதில் 21,915 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.24 சதவீதமாகும்.
154 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: வேலூர் வருவாய் மாவட்டத்தில் மொத்தமுள்ள 625 பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 154 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், 31 அரசுப் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். பாடவாரியாக மொழிப்பாடத்தில் 92.26 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 93.01 சதவீதம் பேரும், கணிதத்தில் 92.06 சதவீதம் பேரும், அறிவியலில் 95.65 சதவீதம் பேரும், சமூக அறிவியலில் 92.85 சதவீத மாணவ, மாணவிகளும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
481 மதிப்பெண்களுக்கு மேல் 173 பேர்: மதிப்பெண்கள் அடிப்படையில் 481 மதிப்பெண்களுக்கு மேல் 55 மாணவர்கள், 118 மாணவிகள் என மொத்தம் 173 பேர் பெற்றுள்ளனர். 451 முதல் 480 வரை 526 மாணவர்கள், 1,141 மாணவிகள் என 1,667 பேரும், 426 முதல் 450 மதிப்பெண்கள் வரை 773 மாணவர்கள், 1,393 மாணவிகள் என 2,166 பேரும், 401 முதல் 425 மதிப்பெண்கள் வரை 1,158 மாணவர்கள், 1,728 மாணவிகள் 2,886 பேரும், 301 முதல் 400 மதிப்பெண்கள் வரை 7,148 மாணவர்கள், 9,503 மாணவிகள் என 16,651 பேரும், 201 முதல் 300 மதிப்பெண்கள் வரை 11,072 மாணவர்கள், 9,499 மாணவிகள் என 20,571 பேரும், 176 முதல் 200 மதிப்பெண்கள் வரை 1,395 மாணவர்கள், 820 மாணவிகள் என 2,215 பேரும், 175 மதிப்பெண்களுக்கு கீழ் 3,072 மாணவர்கள், 1,337 மாணவிகள் என 4,409 பேரும் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com