திருப்பத்தூர் அஞ்சலக கோட்ட கிளைகள் கணினி மயம்

திருப்பத்தூர் அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட அஞ்சல் அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டன.

திருப்பத்தூர் அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட அஞ்சல் அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டன.
திருப்பத்தூர் அஞ்சலக கோட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் குடியாத்தம் தலைமை அஞ்சலகங்கள் உள்ளன. 51 துணை அஞ்சலகங்களும், 242 கிராம கிளை அஞ்சலகங்களும் உள்ளன. அண்மையில், அனைத்து தபால் நிலையங்களைம் இணையம் மூலம் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்கான பயிற்சி அனைத்து தபால் ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது. தற்போது தேசிய அஞ்சல் வார விழா நடைபெற்று வருவதையொட்டி, அனைத்து கிராம அஞ்சலகங்களும் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, திருப்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில், கிளை அஞ்சலக ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் மூலம் பணப் பரிவர்த்தனை இயந்திரம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு, அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர் என்.கார்த்தியேகயன் தலைமை வகித்து, பணப் பரிவர்த்தனை இயந்திரத்தை வழங்கினார். இதில், உதவி கண்காணிப்பாளர் பிரேமாவதி, ஆய்வாளர் கார்த்திகேயன், தலைமை தபால் அதிகாரி ஆனந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறுகையில், இந்த பிபிஎம் இயந்திரம் மூலம், பயோமெட்ரிக் முறையில், மக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பணப் பரிவர்த்தணைகளை செய்து கொள்ளலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com