நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி விழா: குடும்பத்துடன் ஆட்சியர் பங்கேற்பு

நெமிலி பாலாபீடத்தில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில் வியாழக்கிழமை வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார்.

நெமிலி பாலாபீடத்தில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில் வியாழக்கிழமை வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார்.
அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் புதன்கிழமை முதல் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை நவராத்திரி இன்னிசை விழா தொடங்கியது. 
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை, நெமிலி பாலாபீட நவராத்திரி விழாவில் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன்  தனது குடும்பத்தாருடன் பங்கேற்றார். முன்னதாக பீடத்துக்கு வந்த ஆட்சியர் 
எஸ்.ஏ.ராமன் மற்றும் குடும்பத்தாரை பீடாதிபதி எழில்மணி வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பீடாதிபதி எழில்மணி எழுதிய "திரிபுரசுந்தரி திருவிளையாடல்' என்ற நூலை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்டார். 
விழாவில், பீடாதிபதியின் துணைவியார் நாகலட்சுமி,  பீட நிர்வாகி மோகன், பொருளாளர் முரளிதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com