மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

தெங்கால் கிராம பாலாற்றுப் படுகையில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 100-க்கும்

தெங்கால் கிராம பாலாற்றுப் படுகையில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
வாலாஜாபேட்டை வட்டம், தெங்கால் கிராம பாலாற்றுப் படுகையில் புதிதாக மணல் குவாரி அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருதாக தகவல் பரவியது. அங்கு மணல் குவாரி அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து சுற்றியுள்ள 20  கிராமங்களும், பெல், வேலூர், சத்துவாச்சாரி உள்ளிட்ட  பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் குடும்பங்களின் குடிநீர் ஆதாரமும், சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். 
எனவே அப்பகுதியி ல் புதிய மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனக் கோரி  அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர்,  வருவாய்  கோட்டாட்சியர்  ஆகியோரிடம்  மனு அளித்தனர். 
மேலும், கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில் கீழ்விஷாரத்தை அடுத்த வேப்பூர் பாலாற்றுப் படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளதாக தெரிவித்து மணல் எடுக்க தேவையான ஆயத்தப் பணிகளில் அதிகாரிகள் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வருகின்றனர். 
இதுகுறித்து தகவலறிந்த தெங்கால், நவ்லாக், புளியங்கண்ணு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் 100- க்கும் மேற்பட்டோர் தெங்கால் ஊராட்சி முன்னாள் தலைவர் டி.சி. பத்பநாபன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் எல்.சி.மணி ஆகியார் தலைமையில் வெள்ளிக்கிழமை, ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் வேணுசேகரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, கோரிக்கை மனுக்களை ஆட்சியருக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரித்ததை அடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com