உலக விண்வெளி வாரம்: பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி அறிவிப்பு

உலக விண்வெளி வாரத்தையொட்டி, தமிழகப் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை மகேந்திரகிரி இந்திய

உலக விண்வெளி வாரத்தையொட்டி, தமிழகப் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அதன் பொதுமேலாளர் 
ஏ.நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக விண்வெளி வாரம் திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகத்தில் வரும் அக்டோபர் 4 முதல் 10-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு விண்வெளிச் சுற்றுலா, 10 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு வேற்று கிரகத்தில் ஒன்றுபட்ட குடியிருப்பு ஆகிய தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது. கட்டுரைகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். 2,000 வார்த்தைகளுக்கு மிகாமல், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டும் எழுதிட வேண்டும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர், முகவரி, பெற்றோர் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகியற்றை குறிப்பிட்டிருக்க வேண்டும். 
அத்துடன், தலைமையாசிரியரின் ஒப்புதலும் இணைத்து நிர்வாக அலுவலர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி, திருநெல்வேலி மாவட்டம் - 627 133 என்ற முகவரிக்கு அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன்பாக சென்று சேரும்படி அனுப்பிட வேண்டும். உறையின்மேல் கட்டுரைப் போட்டிக்கு என எழுதிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04637 - 281210, 281940, 281230, 94421-40183, 94860-41737, 94434-55411 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com