தென்திருமலையில் பிரம்மோற்சவம்: அக்டோபர் 2-இல் தொடங்குகிறது

 மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஜடையம்பாளையத்தை அடுத்த தென்திருமலையில் அமைந்துள்ள ஸ்ரீவேங்கடேஸ்வர சுவாமி வாரி ஆலயத்தில் வரும் அக்டோபர் 2 முதல் வருடாந்திர பிரம்மோற்சவ விழா துவங்குகிறது.
தென்திருமலையில் பிரம்மோற்சவம்: அக்டோபர் 2-இல் தொடங்குகிறது

 மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஜடையம்பாளையத்தை அடுத்த தென்திருமலையில் அமைந்துள்ள ஸ்ரீவேங்கடேஸ்வர சுவாமி வாரி ஆலயத்தில் வரும் அக்டோபர் 2 முதல் வருடாந்திர பிரம்மோற்சவ விழா துவங்குகிறது.
 இத்திருக்கோயிலில் பூஜை முறைகள் அனைத்தும் திருப்பதி திருமலை ஆலய முறையைப் பின்பற்றி நடைபெற்று வருகின்றன.

அதே முறைப்படி, பிரம்மோற்சவ விழாவும் தொடர்ந்து 10 நாள்கள் சிறப்பாக நடைபெறவுள்ளன. பிரம்மோற்சவ தொடக்க நாளான அக்டோபர் 2-ஆம் தேதி மாலை அங்குரார்ப்பணம், அதைத் தொடர்ந்து 3-ஆம் தேதி மாலை கொடியேற்றம், பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி உலா, 4-ஆம் தேதி காலை சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா, மதியம் திருமஞ்சனம், மாலை அன்னபட்சி வாகனத்தில் சுவாமி உலா, 5-ஆம் தேதி காலையில் சிம்ம வாகனத்திலும், மாலையில் முத்துப்பந்தல் வாகனத்திலும் சுவாமி உலா,  6-ஆம் தேதி காலையில் கல்பவிருட்ச வாகனத்திலும், மாலையில் சர்வபூபாள வாகனத்திலும் சுவாமி உலா, 7-ஆம் தேதி காலையில் ஸ்ரீவாரி சுவாமிக்கு ஸ்ரீ ஆண்டாள் மாலை சமர்ப்பித்தல், அதைத் தொடர்ந்து ஸ்ரீமலையப்ப சுவாமியின் மோகினித் திருக்கோலமும், மாலையில் கருட சேவையும் நடைபெறவுள்ளது.

8-ஆம் தேதி காலையில் அனுமந்த வாகனத்தில் சுவாமி உலா, மாலையில் வசந்தோற்சவத்துடன் தங்க ரதத்திலும், கஜ வாகனத்திலும் சுவாமி உலா, 9-ஆம் தேதி காலை சூர்யபிரபை வாகனத்தில் சுவாமி உலாவுடன் திருமஞ்சனமும், மாலையில் சந்திரபிரபை வாகனத்தில் சுவாமி உலாவும் நடைபெறவுள்ளது. 10-ஆம் தேதி காலை உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம், மாலையில் குதிரை வாகனத்தில் சுவாமி உலா, 11-ஆம் தேதி காலை சக்ர ஸ்நானமும், மாலையில் கொடி இறக்குதலும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com