பவானி ஆற்றின் குறுக்கே மேலும் நான்கு தடுப்பணைகள் கட்டும் கேரளம்: தடுத்து நிறுத்த விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

பவானியின் குறுக்கே மேலும் நான்கு தடுப்பணைகள் கட்டும் பணியை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளதால் உடனடியாகத் அதைத் தடுத்து நிறுத்தக்கோரி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பவானியின் குறுக்கே மேலும் நான்கு தடுப்பணைகள் கட்டும் பணியை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளதால் உடனடியாகத் அதைத் தடுத்து நிறுத்தக்கோரி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.கந்தசாமி, மாநிலத் தலைவர் வழுக்குப் பாறை பாலு ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 கேரள மாநிலத்தில் உற்பத்தியாகி தமிழகப் பகுதிக்கு வரும் பவானி ஆற்றின் குறிக்கே அந்த மாநில அரசு தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய இடங்களில் இரு தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. மேலும், தடுப்பணையில் இருந்து உயரமான பகுதிக்கு தண்ணீர் எடுத்துச் செல்வற்தாக தலா ஆறு பம்ப் ஹவுஸ் கட்டப்பட்டுள்ளது. இதனால், பவானி ஆறு வறண்டு போகும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. இந்நிலையில், கேரள அரசு பாடவயல், சீரக்கடவு, சாவடியூர், சாளையூர் ஆகிய நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. எனவே, தாமதமின்றி உச்ச நீதிமன்றத்திடமும், மத்திய அரசிடமும் முறையிட்டு மூன்று மாவட்ட மக்களைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழு அமைக்க கொஜக வலியுறுத்தல்: இதனிடையே பவானி ஆற்றின் குறுக்கே கேரளம் கட்டியுள்ள தடுப்பணைகளில் ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பில் குழு அமைக்க வேண்டும் என்று கொங்குநாடு ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து, அந்தக் கட்சியின் நிறுவனர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளைக் கட்டியுள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ச்சியாக மழை பெய்தும் பவானிசாகர் அணைக்கு உரிய நீர்வரத்து இல்லை. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மீண்டும் நான்கு இடங்களில் தடுப்பணை கட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. அந்த அணைகளும் கட்டிமுடிக்கப்பட்டால் கொங்கு மண்டலம் பாலைவனமாக மாறிவிடும். எனவே, பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைகளை ஆய்வு செய்து கேரள அரசிடம் வலியுறுத்த தமிழக அரசு சார்பில் ஒரு குழு அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com