கோவையில் முதல்முறையாக இம்ஸி முறையில் குழந்தை பிறப்பு

கோவை சுதா கருத்தரித்தல் மையத்தில் இம்ஸி அதிநவீன சிகிச்சை முறையில் இலங்கை பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.
கோவையில் முதல்முறையாக இம்ஸி முறையில் குழந்தை பிறப்பு

கோவை சுதா கருத்தரித்தல் மையத்தில் இம்ஸி அதிநவீன சிகிச்சை முறையில் இலங்கை பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் தனபாக்கியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவையில் முதல்முறையாக இம்ஸி எனப்படும் அதிநவீன டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை முறை சுதா கருத்தரித்தல் மருத்துவமனையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன சிகிச்சை முறையில் இலங்கை,  அமெரிக்கா,  சிங்கப்பூர், இங்கிலாந்து, கென்யா,  நைஜீரியா, கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த குழந்தை இல்லாத பல தம்பதிகள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். இந்நிலையில்,  இலங்கையைச் சேர்ந்த நிரோசா, பிரேமதி லகே தம்பதியினர் குழந்தை பேறுக்காக சுதா கருத்தரித்தல் மையத்தை 2016-ஆம் ஆண்டு அணுகினர்.
 இவர்களுக்கு அதிநவீன சிகிச்சையான இம்ஸி முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இம்ஸி முறையானது ஆண் விந்தணுக்களை 6,500 மடங்கு உற்பத்தியை பெருக்கி,  விந்தணுக்களில் உள்ள குறைகளை நீக்கி வீரியமான மற்றும் தரமான விந்தணுக்களை பெண்ணின் கருமுட்டையில் உட்செலுத்தி குழந்தையை உருவாக்குவதே இம்ஸி முறை ஆகும்.
சுதா கருத்தரித்தல் மையத்தில் இம்ஸி முறையில் கரு உருவாக்கப்பட்டதன் மூலம் இலங்கை பெண்ணுக்கு  நவம்பர் 21- ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.  குழந்தை இல்லாத தம்பதியினருக்கு இம்ஸி முறையில் குழந்தை பேறு கிடைக்க செய்வது கருத்தரித்தல் துறையில் ஒரு மைல்கல் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com