துப்புரவுத் தொழிலாளர் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

கோவை மாநகராட்சி துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக தொழிலாளர் அலுவலகத்தில்

கோவை மாநகராட்சி துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக தொழிலாளர் அலுவலகத்தில்வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
கோவை மாநகராட்சியில் 4,500-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 3,400-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், கிளீனர்கள் ஆகியோர்ஒப்பந்த அடிப்படையில்பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு தற்போது தினக் கூலியாக ரூ.250 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மாவட்ட ஆட்சியரால் நிர்ணயிக்கப்பட்ட தினக் கூலியான ரூ. 350 வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தரப்பில்தெரிவிக்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக தொழிலாளர் அலுவலகத்தில் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறுவதாகஇருந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில், மாநகராட்சி மற்றும் ஒப்பந்ததாரர்கள் தரப்பில் யாரும் பங்கேற்காததால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 22-ஆம்தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என துப்புரவுத்தொழிலாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com