மதுக் கடைகளை அகற்றக் கோரி பூங்கொத்துடன் ஆட்சியரிடம் மனு

மதுக்கடைகளை அகற்றக் கோரி 45-ஆவது வார்டு பகுதி மக்கள் பூங்கொத்துடன் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுக்கடைகளை அகற்றக் கோரி 45-ஆவது வார்டு பகுதி மக்கள் பூங்கொத்துடன் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 கோவை மாநகராட்சி 45-ஆவது வார்டுக்கு உள்பட்ட கண்ணப்ப நகர் பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் சார்பில் ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் அளித்த மனுவிவரம்:
 கண்ணப்ப நகர் பகுதியில் ஏற்கெனவே இரண்டு மதுக்கடைகள் உள்ளன. இந்நிலையில், மேலும் இரண்டு புதிய  மதுக்கடைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அமைந்துள்ளது. 300 மீட்டர் இடைவெளியில் நான்கு மதுக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 இதுகுறித்து, முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார் அளித்ததன் அடிப்படையில் புதிய மதுக்கடைகள் அமைக்கப்படமாட்டாது என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னரும் 2 மதுக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மதுக்கைர மார்க்கெட், சென்னை சில்க்ஸ் காலனியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் புதிய மதுக்கடை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு புதிய மதுக்கடை அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என மதிமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் வே.ஈஸ்வரன் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.
தேசிய கீதத்தை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும்: தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் கோவையில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டபோது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேசிய கீதத்தை அவமதித்ததுடன், இந்தியாவுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். எனவே, தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணித் தலைவர் காலனி பிரபு அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊனமுற்றோர் பள்ளிகளை கண்காணிக்க வேண்டும்: கோதபாளையம் சிறப்புப் பள்ளியை அரசு ஏற்று நடத்தி குழந்தைகளின் கல்வியைப் பாதுகாக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்காக ஆட்சியர் அலுவலகத்திலேயே மருத்துவர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளும் வகையில் குறைதீர் கூட்டம் நடத்தவேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களை செயல்படுத்தவது குறித்துக் கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் மாற்றுத் திறனாளி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊனமுற்றோர் சிறப்புப் பள்ளிகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளி மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com