கவுண்டம்பாளையம் நெடுஞ்சாலையில் லாரிகள் நிறுத்துவதைத் தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கோவை அருகே கவுண்டம்பாளையத்தில் நெடுஞ்சாலையோரத்தில் மதுபான லாரிகள் நிறுத்துவதைத் தடுக்கக் கோரி டாஸ்மாக் முதுநிலை மேலாளர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை அருகே கவுண்டம்பாளையத்தில் நெடுஞ்சாலையோரத்தில் மதுபான லாரிகள் நிறுத்துவதைத் தடுக்கக் கோரி டாஸ்மாக் முதுநிலை மேலாளர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென் மாவட்டங்களில் உள்ள மதுபான ஆலைகளிலிருந்து மதுபானங்களை ஏற்றிவரும் லாரிகள், கோவை- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. இப்பகுதிகளில் லாரிகளை நிறுத்தக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் லாரிகள் நிறுத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் தேவேந்திரன் தலைமையில் டாஸ்மாக் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com