சோலையாறு மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்

மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருவதால் சோலையாறு மின் நிலையத்தில் தொடங்கப்பட்ட மின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது.

மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருவதால் சோலையாறு மின் நிலையத்தில் தொடங்கப்பட்ட மின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது.
கடந்த இரு வாரங்களாக வால்பாறை வட்டாரத்தில் பெய்த சாரல் மழை காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் சோலையாறு அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டதால் அணையின் நீர்மட்டம் சிறிதளவு உயரத் தொடங்கியது.
நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி கேரள மாநிலத்துக்கு தண்ணீர் திறந்தவிடப்பட்டதுடன், அந்த நீரில் இருந்து சோலையாறு மின் நிலையம் 2-இல் ஜூன் 15-ஆம் தேதி முதல் 16 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட 148 கன அடி தண்ணீர் திங்கள்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மின் நிலையத்தில் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com