வாழைத் தோட்டம் ஆற்றை தூர்வார வலியுறுத்தல்

வால்பாறையில் உள்ள வாழைத் தோட்டம் ஆற்றை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

வால்பாறையில் உள்ள வாழைத் தோட்டம் ஆற்றை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
வால்பாறை அருகே உள்ள அக்காமலை, கருமலை, நடுமலை உள்ளிட்ட பகுதியில் இருந்து வரக்கூடிய நீர் வாழைத்தோட்டம் ஆறு வழியாக சுங்கம் பகுதியை சென்றடைந்து, பின்பு சோலையாறு அணைக்கு செல்கிறது.
இந்த ஆற்றோரப் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் வசிப்பவர்கள் குப்பைகளை ஆற்றில் கொட்டுவதால் தண்ணீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இந்தப் பகுதியை தூர்வார வலியுறுத்தி பல ஆண்டுகளாக பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கனமழை பெய்யும் காலத்தில் ஆற்று வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடும் சமயத்தில் வரும் அதிகாரிகள் உடனடியாக ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுப்பதாக கூறுவது வழக்கமாகிவிட்டதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இதுகுறித்து எம்.எல்.ஏ., எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆற்றில் தற்போது நீர் குறைந்து சாக்கடை போல் தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆற்றை தூரவார நடவடிக்கை எடுக்கவேண்டும். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com