கொடநாடு காவலாளி கொலை வழக்கு: சயன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயன் மீண்டும் திங்கள்கிழமை இரவு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயன் மீண்டும் திங்கள்கிழமை இரவு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட்டில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் ஓம் பகதூர், இவர் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி அதிகாலை 11 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த சயன் ஏப்ரல் 29-ஆம் தேதி பாலக்காடு அருகே காரில் சென்ற போது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். அப்போது அவரை மீட்ட பாலக்காடு போலீஸார் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக கேரளத்தைச் சேர்ந்த சதீஷன், திபு, சந்தோஷ், உதயகுமார், வாளையாறைச் சேர்ந்த மனோஜ், ஜம்ஷேர் அலி, ஜிதின் ஜாய், மற்றொரு மனோஜ், குட்டி என்கிற பிஜின் ஆகியோரைக் கைது செய்தனர். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சயன் மேல் சிகிச்சைக்காக மே 17-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சயன் கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படு கோவை சிறையில் ஜூன் 6-ஆம் தேதி அடைக்கப்பட்டார். ஆனால் மீண்டும் சயனின் உடல்நிலை மோசமானதால் கோவை அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே, சயன் குணமடைந்ததாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தால் திங்கள்கிழமை மாலை 4.30 மணி அளவில் விடுவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சிறையில் அடைக்கப்பட்ட சயனை சிறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமடையாமல் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சிறை மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி திங்கள்கிழமை இரவு மீண்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சயன் சேர்க்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com