பாஜக உண்ணாவிரதப் போராட்டம்

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் காரமடை ஒன்றிய பகுதிகளையும் இணைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் காரமடை ஒன்றிய பகுதிகளையும் இணைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
காரமடை ஒன்றிய பாஜக சார்பில் கார் நிறுத்த மைதானத்தில் நடைபெற்ற இப்போராட்டதுக்கு, அக்கட்சியின் ஒன்றியத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், மாவட்ட பொதுச்செயலாளர் வி.பி.ஜெகநாதன், மாவட்டச் செயலாளர் சக்திவேல், நகரத் தலைவர்கள் மனோஜ்குமார் (மேட்டுப்பாளையம்), விக்னேஷ் (காரமடை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், நந்தகுமார், மாவட்ட பொதுச்செயலர்கள் செல்வராஜ், சத்தியமூர்த்தி, உள்பட பலர் பேசினர்.
கூட்டத்தில், அத்திக்கடவு-அவிநாசி பாசனத் திட்டத்தில் காரமடை ஒன்றியத்தில் உள்ள மூடுதுறை ஊராட்சிக்குள்பட்ட இரு குட்டைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் முழுப் பயனை ஒன்றிய பகுதி விவசாயிகள் பெறும்வகையில் காரமடை ஒன்றியத்துக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சிகளிலுள்ள குளம், குட்டைகளையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், கோவை வடக்கு மாவட்ட பொதுச்செயலர் சங்கீதா, அமைப்பு சாரா மாவட்டத் தலைவர்
ஏ.எஸ்.செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்பத்குமார், ஒன்றிய இளைஞரணி பொதுச்செயலர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறுமுகை நகரத் தலைவர் சாமிநாதன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com