காயமடைந்த துப்புரவுத் தொழிலாளி சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு

பணியின்போது, காயமடைந்த துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளியின் இ.எஸ்.ஐ., பி.எப்., தொடர்பான ஆவணத்தை ஒப்பந்ததாரர் முறையாகப் பராமரிக்காததால் பாதிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டார்.

பணியின்போது, காயமடைந்த துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளியின் இ.எஸ்.ஐ., பி.எப்., தொடர்பான ஆவணத்தை ஒப்பந்ததாரர் முறையாகப் பராமரிக்காததால் பாதிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டார்.
கோவை, நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாநகராட்சி துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளி முருகன். இவர், லாரியில் குப்பைகளை ஏற்றும் பணியில் இருந்தபோது, நிகழ்ந்த விபத்தில் தலை, தாடை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவருக்குத் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. உயர் சிகிச்சைக்காக கோவை 100 அடி சாலை 9-ஆவது வீதியில் உள்ள மத்திய அரசின் தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் மருந்துவமனையில் அனுமதிக்க அழைத்துச் சென்றனர். ஆனால், முருகனுக்கு இ.எஸ்.ஐ. பி.எப். பிடித்ததற்கான ஆவணம் இல்லை எனக்கூறி சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. ஆனால், முருகனின் ஊதியத்தில் இருந்து இ.எஸ்.ஐ., பி.எப். ஆகியவற்றுக்கு மாதா மாதம் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இதில், முருகன் பணிபுரியும் ஒப்பந்த நிறுவனம் இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் தொடர்பான ஆவணங்களை முறையாகப் பராமரிக்காமலும், சமர்ப்பிக்காமலும் இருந்தது தெரியவந்தது.
இதையறிந்த சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் பாதிக்கப்பட்ட முருகனைத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளி சுமார் 7 மணி நேரம் சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்பட்டார் என சக தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com