மாநில கைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி அணி வெற்றி

பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது.

பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது.
பெரியநாயக்கன்பாளையம் வெங்கட கிருஷ்ணன் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் ராமசாமி நினைவு டெக்ஸ்மோ கோப்பைக்கான இரண்டாம் நாள் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், இந்தியன் வங்கி அணியும், அக்வா பம்ப் அணியும் மோதின. இதில் 25-23, 31-33, 25-18, 21-25, 15-11 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியன் வங்கி அணி வெற்றிபெற்றது. தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் வருமான வரித் துறை அணியும், சுங்க வரித் துறை அணியும் மோதின. இதில், 25-19,18-25,26-24,25-20 என்ற புள்ளிக் கணக்கில் சுங்க வரித் துறை அணி வெற்றி பெற்றது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெறும் ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும், சுங்க வரித் துறை அணியும் ,இரண்டாவது ஆட்டத்தில் வருமான வரித் துறை அணியும், அக்வா பம்ப் அணியும் மோதுகின்றன.
மாவட்ட அளவிலான போட்டி: முன்னதாக, வியாழக்கிழமை காலையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் உஜ்ஜயனூரைச் சேர்ந்த கந்தன் நினைவு அணியும், சாமிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த நண்பர்கள் அணியும் மோதின. இதில், 2:0 என்ற புள்ளிக் கணக்கில் கந்தன் நினைவு அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து, தேவராயபுரத்தைச் சேர்ந்த நண்பர்கள் நற்பணி மன்ற அணியும், பெரியதடாகத்தைச் சேர்ந்த அனுவாவி அணியும் மோதின. இதில், 2:0 என்ற புள்ளிக் கணக்கில் நண்பர்கள் நற்பணி மன்ற அணி வெற்றி பெற்றது. ஜோதிபுரத்தைச் சேர்ந்த கருடா அணியும், பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த நண்பர்கள் அணியும் மோதின. இதில், 2:0 என்ற புள்ளிக் கணக்கில் கருடா அணி வெற்றி பெற்றது. மத்வராயபுரத்தைச் சேர்ந்த பாரதியார் அணியும், எஸ்.எம்.பாளையத்தைச் சேர்ந்த போனிக்ஸ் அணியும் மோதின. இதில், பாரதியார் அணி வெற்றி பெற்றது. 110 பட்டாலியனைச் சேர்ந்த கோவை டெரர் அணியும், கந்தன் நினைவு அணியும் மோதின, இதில், 2:1 செட் கணக்கில் டெரர் அணியும் வெற்றி பெற்றது.
பிற்பகலில் நடைபெற்ற ஆட்டத்தில் தேவராயபுரத்தைச் சேர்ந்த நண்பர்கள் அணியும், கணுவாயைச் சேர்ந்த கைப்பந்து அணியும் மோதின. இதில், நண்பர்கள் அணியும், உப்பிலிபாளையம் குப்புசாமி நினைவு அணியும், கருடா அணியும் மோதியதில்  குப்புசாமி நினைவு அணியும், பாரதியார் அணியும், உஜ்ஜயனூரைச் சேர்ந்த மோகன் நினைவு அணியும் மோதியதில் பாரதியார் அணியும், 110 பட்டாலியனைச் சேர்ந்த கோவை டெரர் அணியும், நண்பர்கள் நற்பணி மன்ற அணியும் மோதியதில் கோவை டெரர் அணியும், குப்புசாமி நினைவு அணியும், பாரதியார் அணியும் மோதியதில்  பாரதியார் அணியும் வெற்றி பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com