100 சதவீதத் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

வால்பாறை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி
பத்தாம் வகுப்புத் தேர்வில் வால்பாறை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
 வால்பாறை வட்டாரத்தில் மொத்தம் மூன்று தனியார் மற்றும் 7 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதியிருந்தனர்.
 இதில், வால்பாறை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 100 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 சதவீதம் தேர்ச்சியை இப்பள்ளி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ள மாணவி 456 மதிப்பெண் பெற்றுள்ளார்.  வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 73 சதவீதம், சின்கோனா அரசு உயர்நிலைப் பள்ளி 93 சதவீதம், முடீஸ் அரசு மேல்நிலைப் பள்ளி 88 சதவீதம், சோலையாறு அணை அரசு மேல்நிலைப் பள்ளி 80 சதவீதம், ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப் பள்ளி-78 சதவீதம், அட்டகட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 90 சதவீதம் என தேர்ச்சி பெற்றுள்ளன.
 வால்பாறை தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பியூலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தூய இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

ஏ.வி.பி. மெட்ரிக். பள்ளி 100% தேர்ச்சி
நரசிம்மநாயக்கன்பாளையத்தையடுத்த தெற்குபாளையத்தில் உள்ள ஏ.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 220 பேரில் மாணவி டி.கௌசிகா கணிதம், சமூக அறிவியலில் முழு மதிப்பெண்களுடன் 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி ஏ.லாவண்யா, மாணவர்கள் ஜி.சபரீஸ், அஸ்வின்ராம் ஆகியோர் 495 மதிப்பெண்களும், மாணவி எஸ்.லோகிதா, டி.யஸ்மிதா ஆகியோர் 494 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இதில், கணிதத்தில் 17 பேரும், அறிவியலில் 15 பேரும், சமூக அறிவியலில் 56 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இவர்களைப் பள்ளித் தலைவர் சி.சுப்பிரமணியம், தாளாளர் தமிழ்வாணன், கல்விப் பிரிவு இயக்குநர்கள் வெங்கடேஸ்வரன், சண்முகம், குணசேகரன், திருநாவுக்கரசு, முதல்வர் சுப்புலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

ஜி.கே.டி. மெட்ரிக். பள்ளி 100% தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரியநாயக்கன்பாளையம், ஜி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவி பி.டி.பவித்ரா 595 மதிப்பெண்களும், வி.அனிதா, பி.எஸ்.காவ்யா, எம்.நிதேஷா ஆகியோர் தலா 494 மதிப்பெண்களும், மாணவர் ஹரிஷ் ராமகிருஷ்ணா, பி.டி.கோனிக்ஷா வர்ஷினி, எம்.ஜெயப்ரீத்தி ஆகியோர் தலா 493 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
மேலும், தேர்வு எழுதியவர்களில் 12 பேர் கணிதத்திலும், 11 பேர் அறிவியலிலும், 26 பேர் சமூக அறிவியலிலும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தொடர்ந்து, 28-ஆவது ஆண்டாக 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.  இதற்குக் காரணமான் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகளை பள்ளித் தாளாளர் ஆர்.ராஜேந்திரன், முதன்மைச் செயலர் பிரசன்னா ராதாகிருஷ்ணன், முதல்வர் சித்ரா செளந்திரராஜன் ஆகியோர் பாராட்டினர்.

நேஷனல் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
மேட்டுப்பாளையம் நேஷனல் மெட்ரிக் பள்ளி 10-ஆம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில், 78 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 மாணவிகள் எம்.ஸ்வாதி, கே.எஸ்.தர்ஷினி ஆகிய இருவரும் தலா 496 மதிப்பெண்கள்  எடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழில் 98, ஆங்கிலத்தில் 98, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 என இணையான மதிப்பெண்களை இருவரும் எடுத்துள்ளனர்.
 மாணவி பி.ஆர்த்தி 493 மதிப்பெண்களும், ஏ.அமிர்தகன்யா 491 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 450-க்கும் மேல் 33 பேர், 400-க்கும் மேல் 59 பேர் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 3 பாடங்களில் 3 பேர், இரண்டு பாடங்களில் 5 பேர், ஒரு பாடத்தில் 7 பேர் என 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
 வெற்றி பெற்ற மாணவ,மாணவியரைப் பள்ளித் தாளாளர் கே.ரங்கசாமி, செயலர் பி.வேலுசாமி, துணைச் செயலர் ஏ.வி.ராமசாமி, முதல்வர் மனோண்மணி, பள்ளி  அறங்காவலர்கள், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com