ஏ.டி.எம்.களில் பணம் இன்றி எஸ்டேட் தொழிலாளர்கள் தவிப்பு

வால்பாறையில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால், சம்பளப் பணத்தை எடுக்க வரும் தோட்ட தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

வால்பாறையில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால், சம்பளப் பணத்தை எடுக்க வரும் தோட்ட தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
 வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான சம்பளம், அவரவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. வால்பாறை வட்டாரத்தில் மொத்தம் மூன்று வங்கிகளின் ஏ.டி.எம்.கள் மட்டுமே உள்ளன. இந்த ஏ.டி.எம்.கள் மூலம் வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள், தோட்டத் தொழிலாளர்கள் பணம் எடுத்து வருகின்றனர்.
  இதில், தோட்டத் தொழிலாளர்கள் ஏ.டி.எம்.கள் மூலமாக தங்கள் சம்பளப் பணத்தை எடுப்பதில், சிரமத்துக்குள்ளாகின்றனர். வேலை முடிந்து மாலை நேரத்தில் வரும் தொழிலாளர்கள், ஏ.டி.எம்.களில் போதுமான பணம் இல்லாமல் ஏமாற்றத்தடன் திரும்பிச் செல்கின்றனர். எப்பொழுதும் முழு சேவை அளித்து வரும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். களிலும் கடந்த ஒரு வார காலமாக பணம் நிரப்பப்படுவதில்லை. இவ்வங்கியில் போதுமான பணம் இல்லாததால், ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப முடியவில்லை என்று வங்கி அதிகாரிகள் கூறுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 இப்பிரச்னைக்கு வங்கிகள் உரிய தீர்வுகாண வேண்டும் என தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com