காருண்யா நகரில் நாளை சிறப்பு ஆசீர்வாதப் பிரார்த்தனைக் கூட்டம்

கோவை காருண்யா நகரில் உள்ள பெதஸ்தா சர்வதேசப் பிரார்த்தனை மையத்தில், இயேசு அழைக்கிறார் சிறப்பு ஆசீர்வாதப் பிரார்த்தனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 21) நடைபெற உள்ளது.

கோவை காருண்யா நகரில் உள்ள பெதஸ்தா சர்வதேசப் பிரார்த்தனை மையத்தில், இயேசு அழைக்கிறார் சிறப்பு ஆசீர்வாதப் பிரார்த்தனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 21) நடைபெற உள்ளது.
 இது குறித்து பெதஸ்தா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
 கோவை-சிறுவாணி சாலையில் அமைந்துள்ள பெதஸ்தா சர்வதேசப் பிரார்த்தனை மையத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்தச் சிறப்புப் பிரார்த்தனையில், இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் பால் தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு அருளுறை வழங்குகின்றனர்.
 போதகர் ஜெபராஜ் சாமுவேல், கிங்ஸிலி உள்ளிட்ட பல்வேறு சபை போதகர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். புதிய கல்வி ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவ,  மாணவிகளுக்கு ஆசிர்வாதம் அளிக்கும் வகையிலும், குடும்பங்கள் செழிக்கவும் இந்த சிறப்புப் பிரார்த்தனை நடைபெற உள்ளது.
  இதில், மாணவ,மாணவிகளின் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வசதியாக, கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து காருண்யா நகர் செல்வதற்கும், கூட்டம் முடிந்த பிறகு காந்திபுரம் திரும்புவதற்கும் சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு தங்கும் வசதி, சிற்றுண்டி வசதி, புத்தக விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. காருண்யா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை பற்றி அறிந்துகொள்ள அரங்குகள் அமைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை பெதஸ்தா நிர்வாகி ஸ்டீபன் பிரபு, பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் ஜோசப் கென்னடி, பிஷப் நாக் ஆகியோர் செய்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com