கோவை-கொழும்பு இடையே விமான சேவை: ஜூலை 8-ஆம் தேதி முதல் இயக்கம்

ஸ்ரீ லங்கன் ஏர்லைனஸ் நிறுவனம் சார்பில் கோவை-கொழுப்பு இடையே ஜூலை 8-ஆம் தேதி முதல் விமான சேவை தொடக்கப்பட உள்ளது.

ஸ்ரீ லங்கன் ஏர்லைனஸ் நிறுவனம் சார்பில் கோவை-கொழுப்பு இடையே ஜூலை 8-ஆம் தேதி முதல் விமான சேவை தொடக்கப்பட உள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சார்பில் கொழும்பு-கோவை-கொழும்பு இடையே விமான சேவையைத் தொடங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்நிலையில், வரும் ஜூலை 8-ஆம் தேதி முதல் வாரத்துக்கு நான்கு நாள்களுக்கு விமான சேவையை இயக்குவது தொடர்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
அதன்படி, செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீலங்கன் விமானம் கொழும்பில் இருந்து புறப்பட்டு கோவைக்கு பிற்பகல் 2.35 மணிக்கு வந்தடையும். பின்னர், மாலை 3.35 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு கொழும்பு செல்லும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் ஏற்கெனவே சென்னை, புது தில்லி, மும்பை, பெங்களூரு, திருச்சி, திருவனந்தபுரம், கொச்சி, மதுரை, வாரணாசி, புத்த கயா ஆகிய முக்கிய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கோவை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய 3 நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து சேவையை நீட்டித்துள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏற்கெனவே ஏர் அரேபியா (துபை), சில்க் ஏர் (சிங்கப்பூர்) விமான நிறுவனங்களின் சார்பில் சர்வதேச விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மூன்றாவதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சார்பில் சர்வதே விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com