மதுக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜமாபந்தியில் பொது மக்கள் மனு

அன்னூர் அருகே வெள்ளாளபாளையத்தில் அமைக்கப்பட்டு வரும் மதுக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த ஊர் மக்கள் ஜமாபந்தியில்  வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

அன்னூர் அருகே வெள்ளாளபாளையத்தில் அமைக்கப்பட்டு வரும் மதுக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த ஊர் மக்கள் ஜமாபந்தியில்  வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
அன்னூர்,   கணேசபுரத்தில் செயல்பட்டு வந்த மதுக் கடையை அங்கிருந்து அகற்றி, கரியாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட வெள்ளாளபாளையத்தில் அமைக்கும் பணியில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், வெள்ளாளபாளையம், கதவுகரை, சாலையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்னூர் வட்டட்சியர் அலுவலகத்தில் கடந்த 9-ஆம் தேதி தர்னாவில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் இருதயராஜிடம் மனு அளித்தனர். இருப்பினும், மதுக் கடை அமைக்கும் பணி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அப்பகுதி பொது மக்கள் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கலந்து கொண்டு, மதுக் கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிசந்திரனிடம் மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com