சிக்கலான வாழ்க்கையை எதிர்கொள்ள புத்தகங்கள்தான் வழிகாட்டி: கவிஞர் புவியரசு

சிக்கலான வாழ்க்கை முறையை எளிதாக எதிர்கொள்ள புத்தகங்கள்தான் சிறந்த வழிகாட்டி என்று கவிஞர் புவியரசு பேசினார்.

சிக்கலான வாழ்க்கை முறையை எளிதாக எதிர்கொள்ள புத்தகங்கள்தான் சிறந்த வழிகாட்டி என்று கவிஞர் புவியரசு பேசினார்.
உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம் சார்பில் கோவையில் பல்வேறு பகுதிகளில் புத்தகக் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிகழ்ச்சியின் நிறைவு விழா காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கவிஞர் புவியரசு பேசியதாவது:
ஒருவர் இருந்த இடத்தில் இருந்தே உலகத்தைப் பார்க்கும் அற்புதமான இந்தப் புத்தக உலகத்துக்குள் நாம் செல்ல வேண்டும். இந்தப் புத்தகங்களை நாம் படிக்கவில்லை என்றாலும் கூட வீட்டில் வாங்கி வைப்பதன் மூலமாகக் குழந்தைகள் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் வாழ்க்கையில் உலகத்தை தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பை உருவாக்க முடியும்.
பள்ளியிலும், கல்லூரியிலும் உலகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், புத்தகங்கள் மூலமாகத்தான் நாம் பக்குவமடைய முடியும். உலகத்தின் சிக்கலான வாழ்க்கை முறையை ஒருவர் எப்படி எதிர்கொண்டார். அதற்கு எப்படித் தீர்வு கண்டார் என்பதை ஒரு புத்தகத்தில் மூலமாகதான் தெரிந்துகொள்ள முடியும். இப்படி, பல புத்தகங்களை வாசிக்கும்போது பலரின் அனுபவங்களும், சிக்கல்களுக்கு அவர்கள் தீர்வு கண்ட விதத்தையும் அறியமுடியும். புத்தகம் என்பது ஆலயமாகும். சிக்கலான வாழ்க்கையை நாம் எதிர் கொள்ளும்போது புத்தகங்கள்தான் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்றார்.
முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஜி. கல்லூரிப் பேராசிரியர் வி.பாலுசாமி தலைமை வகித்தார். புத்தகக் கண்காட்சி அரங்கை விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் வி.கோபாலகிருஷ்ணன், கொடிசியா முன்னாள் தலைவர் பொன்னுசாமி, தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் ப.மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com