முறைகேடாக மது விற்பனை: தடுக்கக் கோரி ஊர் கூட்டம்

சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் முறைகேடாக நடைபெற்று வரும் மது விற்பனையை தடுக்கக் கோரி திங்கள்கிழமை நடைபெற்ற ஊர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் முறைகேடாக நடைபெற்று வரும் மது விற்பனையை தடுக்கக் கோரி திங்கள்கிழமை நடைபெற்ற ஊர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் முறைகேடாக மது விற்பனை நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், அக்கிராமத்தில் ஊர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து கிராம பகுதியில் விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது. மேலும் இதுகுறித்து சூலூர் வட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிப்பது எனவும்
முடிவெடுக்கப்பட்டது. தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த போலீஸாரிடம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து புகார் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com