டெங்கு விழிப்புணர்வு முகாம்
By DIN | Published on : 09th November 2017 06:41 AM | அ+அ அ- |
கோவையை அடுத்த பிச்சனூரில் உள்ள ஜே.சி.டி. பொறியியல் கல்லூரி சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இக்கல்லூரியில் செயல்பட்டு வரும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், பிச்சனூர், வீரப்பனூர் உள்ளிட்ட கிராமங்களில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரசுரங்களை விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் மூர்த்தி வரவேற்றார். இதன் தொடக்க விழாவில், மதுக்கரை வட்டாட்சியர் சுந்தரராமன், மதுக்கரை பகுதி ஊரக வளர்ச்சி அலுவலர் முருகேசன், பிச்சனூர் ஊராட்சி சிறப்பு அலுவலர் ரவிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகேஷ், செஞ்சிலுவை சங்க அலுவலர் அசோக்பிரபு, செஞ்சுருள் சங்க ஒருங்கிணப்பாளர் செந்தில்பிரபு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.