மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கற்பிப்பது குறித்து பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி

அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி குறித்து பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி குறித்து பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை ராஜ வீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில்,  1 வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையில் படித்த மாற்றுத் திறனாளி குழந்தைகள் பிளஸ் 2 வகுப்பு வரையில் அதே பள்ளியில் படிப்பை தொடரும் வகையில் மாணவர்களுக்கு  ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மாற்றுத் திறன் குழந்தைகளுக்குத்  தேவையான உபகரணங்கள்,  சிறப்பு வகுப்புகள்,  ஆய்வகம்,  நூலகம்,   கழிவறைகளை எளிதில் அணுகுவது, கற்கும் பொருள்கள் சரியான விகிதத்தில் பயன்படுத்துவது போன்றவை குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்தப் பயிற்சி வகுப்பில் 239 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com