கோவை காவல் அருங்காட்சியகத்தில் ஆகாஷ் ஏவுகணைகள் வைக்க ஏற்பாடு

கோவையில் அமைக்கப்பட்டு வரும் காவல் அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக கொச்சியில் இருந்து 2 ஆகாஷ் ஏவுகணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கோவையில் அமைக்கப்பட்டு வரும் காவல் அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக கொச்சியில் இருந்து 2 ஆகாஷ் ஏவுகணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கோவையில் மிகவும் பழமை வாய்ந்த ஹாமில்டன் கிளப் காவல் அருங்காட்சியமாக மாற்றப்பட்டு வருகிறது. இதில், ரோந்துப் படகு, கள்ள நோட்டு தயாரிக்கும் இயந்திரம், பீரங்கிகள், வீரப்பன், மலையூர் மம்பட்டியான் பயன்படுத்திய துப்பாக்கிகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்திய விமானப் படை, தரைப் படையில் பயன்படுத்தப்படும் ஆகாஷ் ரக ஏவுகணைகளை வைக்க காவல் துறை முடிவு செய்தது. இதையடுத்து, கொச்சியில் இருந்து வெடிமருந்துகள் நீக்கப்பட்ட இரு ஏவுகணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த ஏவுகணை நிலத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. உயரம் வரை வானில் பாய்ந்து, இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்டது. சுமார் 30 கி.மீ. வரை பறந்து செல்லக் கூடிய இந்த ஏவுகணைகள் கடந்த 2009ஆம் ஆண்டில் விமானப் படையிலும், 2010ஆம் ஆண்டில் தரைப் படையிலும் சேர்க்கப்பட்டன.
கோவை கொண்டுவரப்பட்டுள்ள இரு ஏவுகணைகளையும் பொது மக்களின் காட்சிக்கு வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். அருங்காட்சியகத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த மாத இறுதிக்குள் இது திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com