கோழிப் பண்ணை தொடங்குவதற்கான கடன் ஆலோசனை முகாம்
By DIN | Published on : 15th November 2017 05:58 AM | அ+அ அ- |
கோழிப் பண்ணை தொடங்குவதற்கான கடன் ஆலோசனை முகாம் பொள்ளாச்சி பாங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரும்பாலான விவசாயிகள் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டும், விளை பொருள்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காமலும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இவர்களுக்கு, கோழிப் பண்ணை வைக்க கடன் வழங்கவும், கோழிப் பண்ணை வைப்பதற்கான வழிமுறைகளை விளக்கவும் பொள்ளாச்சி பாங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளை சார்பில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில், சுகுணா ஃபுட்ஸ் நிறுவனமும் தங்கள் ஆலோசனைகளை வழங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு கோவை பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் துணைப் பொதுமேலாளர் தாமோத்சன், சுகுணா ஃபுட்ஸ் துணைப் பொது மேலாளர் பெரோஸ்கான், பொள்ளாச்சி வங்கிக் கிளை முதன்மை மேலாளர் சுதாகரன், கிணத்துக்கடவு கிளை முதன்மை மேலாளர் சாமுவேல் ஸ்டீபன் உள்ளிட்டோர் பங்கேற்று கோழிப் பண்ணை வைக்க வங்கிக் கடன் பெறும் முறை குறித்து
விளக்கமளித்தனர்.
இக்கூட்டத்தில் பொள்ளாச்சி, உடுமலை, கிணத்துக்கடவு, செஞ்சேரிமலை, பெதப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இதில், 60 விவசாயிகளுக்கு கடன் வழங்க உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.