சோவியத் புரட்சி இந்திய விடுதலைப் போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது: மக்கள் சிந்தனை: பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் சோவியத் புரட்சி தாக்கத்தை ஏற்படுத்தியது என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் சோவியத் புரட்சி தாக்கத்தை ஏற்படுத்தியது என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினார்.
இந்திய கலாசார நட்புறவுக் கழகம், தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் ஆகியன சார்பில் பீளமேடு, பாலன் நகரில் சோவியத் புரட்சியின் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
விழாவை, தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.காமராசு தொடக்கிவைத்தார். தொடர்ந்து, "ரஷியப் புரட்சியும், இந்தியாவும்', "பாசிசத்தை வீழ்த்திய சோவியத் புரட்சி' ஆகிய தலைப்புகளின் கீழ் கருத்தரங்கம் நடைபெற்றது. 
இதையடுத்து, "அக்டோபர் புரட்சியும், இலக்கியமும்' எனும் தலைப்பில் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:
சோவியத் புரட்சியை நேரில் பார்த்து அது குறித்துப் பல்வேறு தகவல்களைச் சேகரித்து முழு தகவல் அடங்கிய நூலை அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் ரீட் வெளியிட்டார். அந்த நூல் புரட்சியின் தாக்கத்தை முழுமையாக வெளிக்கொண்டு வந்தது.
இதுபோன்ற புரட்சி நூல்களைப் படித்து, கூட்டாக விவாதித்து, வரலாற்றை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த 1905-இல் சோவியத் புரட்சி வெடித்தது. ஆனால், அப்போது அது வெற்றி பெறவில்லை என்றாலும், 1917-ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியது. 
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களின் விடுதலைப் போராட்டத்தை தொடங்கிய காந்திக்கு திருக்குறளை அறிமுகம் செய்து வைத்தவர் ரஷிய எழுத்தாளர் டால்ஸ்டாய்தான். விடுதலைப் போராட்டத்துக்கு முன்பிருந்தே ரஷியா-இந்தியாவுக்கு இடையே நட்புறவு இருந்து வருகிறது. 280-க்கும் மேற்பட்ட ரஷிய இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்றார்.
இந்த விழாவில்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன், தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொருளாளர் ப.பா.ரமணி, மொழி பெயர்ப்பாளர் அமரந்த்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com