மண், நீர்ப் பாதுகாப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மைக் கல்வி நிறுவனம் மற்றும் தேசிய வேளாண்மை  ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) இணைந்து நடத்திய திறன்

பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மைக் கல்வி நிறுவனம் மற்றும் தேசிய வேளாண்மை  ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) இணைந்து நடத்திய திறன் மேம்பாட்டுப் பயிற்சி நெகமம் என்ஐஏ கல்வி நிறுவனங்களின் வேளாண்மைப் பயிற்சி மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நெகமம் கிளையின், என்ஐஏ கல்வி நிறுவன வேளாண்மைப் பயிற்சி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் கெம்புசெட்டி தலைமை வகித்தார். சின்ன நெகமம் உழவர்மன்றத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கோவை நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் வசீகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 
பொள்ளாச்சி, தமிழ்நாடு வேளாண்மைப் பொறியியல் துறைப் பொறியாளர் வெங்கடாசலம் மண்வளம் குறித்துப் பேசினார். பொறியாளர் குப்பமுத்து நீர்வளப் பாதுகாப்பு குறித்துப் பேசினார். 
வாணவராயர் வேளாண்மைக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், ஜனப்பிரியா, சுந்தரபாண்டியன், கிருஷ்ணமூர்த்தி, ஹரிபிரசாத் முத்துகண்ணன் ஆகியோர் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம் குறித்துப் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com