அத்தியாவசியப் பொருள்களை வீடு தேடி வந்து கொடுக்கும் திட்டம்

அத்தியாவசியப் பொருள்களை வீடு தேடி வந்து கொடுக்கக் கூடிய ஆஸ்க் எனப்படும் மின்னணு வர்த்தகத் திட்டத்தின் தொடக்க விழா கோவையில் புதன்கிழமை நடைபெற்றது.

அத்தியாவசியப் பொருள்களை வீடு தேடி வந்து கொடுக்கக் கூடிய ஆஸ்க் எனப்படும் மின்னணு வர்த்தகத் திட்டத்தின் தொடக்க விழா கோவையில் புதன்கிழமை நடைபெற்றது.
கோவைப்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,  தென்னிந்திய திரைப்பட விருதுகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஷ்ணுவர்தன் இந்தூரி கலந்து கொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.  கல்விக் குழுமத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் கே.சுந்தரராமன், ஆஸ்க் நிறுவனத்தின் நிறுவனர் ராஜேஷ் கீர்த்தி, இயக்குநர் எபினேசர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டம் குறித்து ராஜேஷ் கீர்த்தி கூறும்போது, ஒவ்வொரு வீடுகளுக்கும் தேவைப்படும் மளிகைப் பொருள்கள், மருந்துகள், சமையலறை சாதனங்கள், பழுதுபார்க்கும் தேவைகள், வாடகை கார்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தேவைக்கும்  மக்கள் தனித்தனி இடங்களைத் தேடிச் செல்லும் நிலை உள்ளது.
ஆஸ்க் திட்டத்தின்படி, மக்கள் விரும்பும் பொருள்கள், விரும்பும் நிறுவனங்களிடம் இருந்து வீட்டுக்கு வந்தடைய ஒரே ஒருவரைத் தொடர்பு கொண்டால் போதுமானது. இதற்காக ஒவ்வொரு குடியிருப்பு பகுதியையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) நியமிக்கப்பட உள்ளனர்.
முதல் கட்டமாக கோவையில் உள்ள சுமார் 4 லட்சம் குடியிருப்புகளை இணைப்பதற்காக சுமார் 3,200 சிஇஓ-க்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிமுக விழாவை தற்போது நடத்தியுள்ளோம். விரைவில் கோவை மக்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்வோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com