தீபாவளி: மாவட்டத்தில் ஒலி, காற்று மாசு அளவு அதிகரிப்பு

தீபாவளிப் பண்டிகை காரணமாக கோவை மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக ஒலி, காற்றின் மாசு அளவு அதிகரித்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை காரணமாக கோவை மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக ஒலி, காற்றின் மாசு அளவு அதிகரித்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியையொட்டி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை ஒலி மற்றும் காற்றின் மாசு குறித்து காலை 6 முதல் மாலை 6 மணி வரையில் அளவீடு செய்யப்பட்டது. இதில், முக்கிய மண்டலம், குடியிருப்பு மண்டலம், கலப்பு மண்டலம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
 இதில் பி.எஸ்.ஜி.கலை, அறிவியல் கல்லூரி (முக்கிய மண்டலம்), ஆட்சியர் அலுவலகம் (கலப்பு மண்டலம், கவுண்டம்பாளையம் (குடியிருப்பு மண்டலம்) என பிரித்து சல்பர் டைஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு என காற்றில் கலந்துள்ள மாசு குறித்து அளவீடு செய்யப்பட்டது.
 இதில், தீபாவளிக்கு முந்தைய நாள்களில் காற்றில் புகை மாசின் சராசரி அளவில் 34, 57 என மூன்று மண்டலங்களில் மாசு அளவு காணப்பட்டது. ஆனால் தீபாவளி நாளில் மாசு அளவு 65, 172 என காணப்பட்டது. இதில் கவுண்டம்பாளையம் பகுதியில் அதிகபட்சமாக காற்றின் மாசு 172 என காணப்பட்டுள்ளது.
இதில், தீபாவளிக்கு முந்தைய நாள்களில் காற்றில் சல்பர் டை ஆக்ஸைடின் அளவு ஒரு மீட்டருக்கு 5.5, 5.8 மைக்ரோ கிராம்  என அளவிடப்பட்டது. தீபாவளி நாளில் 9, 11.5 என அளவிடப்பட்டது. இதேபோல, தீபாவளிக்கு முந்தைய நாளில்  நைட்ரஸ் ஆக்ஸைடின் அளவு 23,  25.2 மில்லி கிராமாகவும், தீபாவளி நாளில் 25.4 மி.கி. மற்றும் 36.1 மில்லி கிராமாகவும் அளவிடப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளிக்கு முந்தைய நாள்களில் ஆட்சியர் அலுவலகத்தில் 59.2 டெஸிபல், கவுண்டம்பாளையத்தில் 61.7 டெஸிபல் என ஒலி மாசு அளவிடப்பட்டது. தீபாவளி நாளில் இது 65.9 டெஸிபல், 71.9 டெஸிபல் என அளவிடப்பட்டுள்ளது. இதில், சராசரி ஒலி மாசு என்பது குடியிருப்புப் பகுதிகளில் 55-ம், தொழிற்சாலைப் பகுதிகளில் 75-ம் ஆகும்.
 ஆனால், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒலி, காற்றின் மாசு குறைந்துள்ளதாகவும், இதற்கு பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே காரணம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com