தீவிரக் களப் பணிகளால் சுகாதாரம் பேணிக் காக்கப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர்

உள்ளாட்சித் துறை மற்றும் சுகாதாரத் துறையினரின் தீவிரக் களப் பணிகளால் மாவட்டத்தில் சுகாதாரம் பேணிக் காக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் துறை மற்றும் சுகாதாரத் துறையினரின் தீவிரக் களப் பணிகளால் மாவட்டத்தில் சுகாதாரம் பேணிக் காக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
 கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், அசோகபுரம் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வீடுவீடாகச் சென்று ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
வாரந்தோறும் வியாழக்கிழமை, டெங்கு தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அன்றைய தினம் துப்புரவு, சுகாதாரம் சார்ந்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் காப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 அதுதவிர நாள்தோறும் அதிகாலை முதல் ஒவ்வோர் ஊராட்சியிலும் டெங்கு காரணிகளைக் கண்டறிந்து அழிக்கும் பணிகளும் உயர் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோவை மாவட்ட நிர்வாகம், மழைக் காலங்களில் ஏற்படக் கூடிய தொற்றுநோய்கள், காய்ச்சல்களை கவனத்துடன் கையாண்டு அதற்கான காரணிகளை முற்றிலும் அழித்து வருகிறது.  இயற்கை முறையில் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் வகையில் நிலவேம்புக் குடிநீர் வழங்குதல், நகர்ப்புறப் பகுதிகளிலும், கிராமங்களிலும் நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலமாக தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளுதல், சுகாதாரப் பணியாளர்கள் மூலமாக வாரந்தோறும் அனைத்து வீடுகளிலும் ஏடிஸ் கொசுப் புழு வளரும் சூழல் உள்ள இடங்களாக அறியப்படும்
பொருள்களைக் கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பொது மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு அவர்கள் சார்ந்த பகுதிகளில் ஏடிஸ் கொசுப் புழு வளரும் சூழல் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக அவை அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், சுற்றுப்புறத்தில் சுகாதாரத்தைக் காக்க பொது மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. உள்ளாட்சி, சுகாதாரத் துறையினரின் தீவிரக் களப் பணிகளால் மாவட்டத்தில் சுகாதாரம் பேணிக் காக்கப்பட்டுள்ளது என்றார்.
 இந்த ஆய்வின்போது, ஊராட்சி உதவி இயக்குநர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பானுமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com