ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலைக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை, அறிவியல் கல்லூரியில் "வியப்பூட்டும் விந்தைகள்' எனும் தலைப்பிலான அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை, அறிவியல் கல்லூரியில் "வியப்பூட்டும் விந்தைகள்' எனும் தலைப்பிலான அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியின் அறிவியல் பேரவை சார்பில் நடத்தப்பட்ட இக்கண்காட்சியை கல்லூரிச் செயலர் சுவாமி கரிஷ்டானந்தா முன்னிலையில், சுவாமி புண்ணிய விரதானந்தர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்தார்.
இக்கண்காட்சியில்,  கணிதம், இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், கணிப்பொறி அறிவியல், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய துறைகளில் பயிலும் மாணவர்கள் அவர்களது துறைசார்ந்த அறிவியல் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் அண்மைக் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மேல்நிலைக் கல்வி சார்ந்த பாடத் திட்டத்தின் அடிப்படையில் செயல் விளக்க மாதிரிகளை வடிவமைத்து வைத்திருந்தனர்.
மேலும், விவசாயத் துறையின் முக்கியத்துவம், நீராதராத்தைச் சேமிக்கும் வழிமுறைகள், உணவை வீணாக்காமல் பயன்படுத்துவது மற்றும் செல்லிடப்பேசியை பயனுள்ள வகையில் உபயோகிப்பது ஆகியன தொடர்பான குறும்படக் காட்சியையும் தயாரித்துப் பார்வையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இக்கண்காட்சியை 18 தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 1,384 மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வீ.பொன்னுசாமி தலைமையில் துறை சார்ந்த பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com