இங்கிலாந்தில் கல்வி பயிலச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை உயரும்: துணைத் தூதர் பரத் ஜோஷி

இங்கிலாந்தில் உயர் கல்வி பயிலச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று சென்னையில் உள்ள இந்தியாவுக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் பரத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் உயர் கல்வி பயிலச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று சென்னையில் உள்ள இந்தியாவுக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் பரத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ட்லி, தனது தயாரிப்புகளை கோவையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. செட்டிபாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்தியாவுக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் பரத் ஜோஷி, பென்ட்லியின் இரண்டு கார்களை கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவையில் ஏராளமான உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இங்கு முதலீடு செய்ய இங்கிலாந்து முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். கல்வித் துறையில் இந்தியாவுடன் இங்கிலாந்து தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 18 ஆயிரம்
மாணவர்கள், உயர் கல்விக்காக இங்கிலாந்து கல்வி நிறுவனங்களை நாடியுள்ளனர். இந்த எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த இங்கிலாந்தில் ஏற்கெனவே வழங்கப்படும் 165 கல்வி உதவித் தொகைகளுடன், மேலும் சில உதவித் தொகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக கோவையில் பல கல்லூரிகளுக்கு நேரில் சென்று
மாணவர்களை சந்தித்து விளக்கமளித்து வருகிறேன். இதனால் இங்கிலாந்து செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். அதேபோல, இங்கிலாந்து மாணவர்களும் இந்தியக் கல்வி நிறுவனங்களில் கல்வி பயில ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் இங்கிலாந்து மாணவர்கள் இந்தியா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 சதவீதம் வீதம் அதிகரித்து வருகிறது.
லண்டன் சுரங்க ரயிலில் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இந்தியாவில் வழக்குகளில் சிக்கிய லலித்மோடி, விஜய் மல்லையா போன்றவர்கள் இங்கிலாந்தில் குடியேற அனுமதி அளிப்பது குறித்து நான் கருத்துத் தெரிவிப்பது முறையாக இருக்காது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com