கோவை-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

கோவை-ராமேசுவரம் இடையே வாரந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

கோவை-ராமேசுவரம் இடையே வாரந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவையில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, பரமக்குடி வழியாக ராமேசுவரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் 17, 24-ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் கோவையில் இருந்து மாலை 6.30-க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடையும். அதேபோல, மறு மார்க்கத்தில் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணி அளவில் கோவை ரயில் நிலையத்தை வந்தடையும்.
கோவை-கிருஷ்ணராஜபுரம் இடையே இயக்கப்படவிருந்த வண்டி எண் : 06060, 06059 ஆகிய இரு வாராந்திர ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதற்கு பதிலாக கோவையில் இருந்து கிருஷ்ணராஜபுரத்துக்கு வண்டி எண் 06074 செப்டம்பர் 15, 22, 29-ஆகிய தேதிகளிலும், கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து கோவைக்கு வண்டி எண் 06073 செப்டம்பர் 16,23, 30 -ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் கோவையில் இருந்து இரவு 8.40-க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு கிருஷ்ணராஜபுரத்தை சென்றடையும். அதேபோல, கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து இரவு 9.20-க்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.20-க்கு கோவை ரயில்நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com