கோவை அரசு மருத்துவமனையில் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை

கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக இருவருக்கு இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக இருவருக்கு இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அசோகன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
கோவை அரசு மருத்துவமனையில் அண்மைக் காலமாக சிக்கலான இருதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது முதல் முறையாக இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கோவை, தடாகம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் தேவராஜ் (13), பொள்ளாச்சி ஆழியாறு பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் மகன் கனகராஜ் (27) ஆகிய இருவருக்கும் தற்போது இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தேவராஜுக்கு செப்டம்பர் 4-ஆம் தேதியும், கனகராஜுக்கு 11-ஆம் தேதியும், முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற சிகிச்சை சென்னை, மதுரை அரசு மருத்துவமனைகளுக்குப் பின்னர் தற்போது கோவை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சிகிச்சைகள் இனி இங்கு தொடர்ந்து நடைபெறும். அடுத்த கட்டமாக மேலும் 4 பேருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதற்காக வால்வுகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இதுமாதிரியான சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில் செய்ய ரூ. 4 லட்சம் வரை செலவாகும். இந்த அறுவை சிகிச்சையை இருதய அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ஏ.சீனிவாசன் தலைமையில், பேராசிரியர்கள் டி.சடகோபன், பாலசுப்பிரமணியம், டாக்டர்கள் முஹமது மின்னதுல்லா,
பிரவீன் பிரபு ஆகியோர் செய்துள்ளனர்.
டாக்டர்கள் சாந்தா, கல்யாணசுந்தரம், செந்தில்குமார் உள்ளிட்டோர் உதவியாக இருந்தனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com