பெ.நா.பாளையம் வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வைணவத் தலங்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வைணவத் தலங்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, பிரச்சித்தி பெற்ற பாலமலை அரங்கநாதர் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
இதையடுத்து, ரங்கநாதர் அன்னவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
இதேபோல, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோயில், ஆதிமூர்த்தி பெருமாள் கோயில், கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் கோயில், நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோயில், காளிபாளையத்தில் உள்ள திருமலைராய பெருமாள் கோயில்,திருமலை நாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோயில், இடிகரையிலுள்ள பள்ளி கொண்ட ரங்கநாதர் கோயில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
மேலும், அனைத்துக் கோயில்களிலும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com