மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களின் நாள்காட்டி வெளியீடு

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களின் படங்கள் அடங்கிய 2018-ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி (காலண்டர்) கோவையில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களின் படங்கள் அடங்கிய 2018-ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி (காலண்டர்) கோவையில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
கோவையைச் சேர்ந்த சுவர்கா பவுண்டேஷன் சார்பில், விளையாட்டுத் துறைகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் புகைப்படங்களுடன் கூடிய நாள்காட்டி கடந்த 2 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 3-ஆவது ஆண்டாக, 2018-ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி வெளியீட்டு விழா நடைபெற்றது.
அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜே.சுவர்ணலதா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நாள்காட்டியில் இடம் பெற்றுள்ள மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகளான சுவர்ணா ராஜ் (டேபிள் டென்னிஸ்), கெளரவ் அலுவாலியா (பாட்மிண்டன்), பிரதிமா ராவ் (டென்னிஸ்), பிரதீப் ராஜ் (டேபிள் டென்னிஸ்), கரம்ஜோதி தலால் (வட்டு, ஈட்டி எறிதல்), கார்த்திகி படேல் (பாட்மிண்டன்), ஜஸ்டின் விஜய் யேசுதாஸ் (நீச்சல், துப்பாக்கி சுடுதல்), பிரக்யா கில்டியால் (ஈட்டி எறிதல்)சாகர் பஹேதி (சைக்கிள் பந்தய வீரர்) ஆகியோர் கலந்துகொண்டு நாள்காட்டியை வெளியிட்டனர்.
இதில், இடம் பெற்றுள்ள புகைப்படங்களையும், மாற்றுத் திறனாளி புகைப்படக் கலைஞர்களே எடுத்திருப்பதாகவும், மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நாள்காட்டி வெளியிடப்பட்டு வருவதாகவும் அறங்காவலர் சுவர்ணலதா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com