செல்லிடப்பேசி கோபுரங்களின் கதிர்வீச்சு அளவைக் கண்டறிய இணையதளம்

செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அளவைக் கண்டறிய உதவும் வகையில் தமிழ்நாடு தொலைத் தொடர்பு துறை

செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அளவைக் கண்டறிய உதவும் வகையில் தமிழ்நாடு தொலைத் தொடர்பு துறை கண்காணிப்புப் பிரிவு சார்பில் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெரிய வணிகக் கட்டடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மேல் அரசு மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செல்லிடப்பேசி கோபுரங்களை அமைத்துள்ளனர். இந்த கோபுரங்கள் வழியாகவே ஒரு செல்லிடப்பேசியில் இருந்து மற்றொரு செல்லிடப்பேசிக்கு இணைப்பு கிடைக்கிறது.
 இந்த செல்லிடப்பேசி கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள கருவியில் இருந்து அதிக அளவில் கதிர்வீச்சு வெளியேறுவதால் மனிதர்கள், பறவைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கள் பகுதிகளில் உள்ள செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அளவு, அலைவரிசை உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தரங் சஞ்சார் என்ற இணையதளத்தை தொலைத் தொடர்புத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
 உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி பிற நாடுகளை விட, பத்தில் ஒரு பங்கு கதிர்வீச்சு அளவே நமது நாட்டில் வெளியேற்றப்படுகிறது. இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் H​T​T​P://​T​A​R​A​N​G​S​A​N​C​H​A​R.​G​O​V.​IN என்ற இணையதளத்தை தொலைத் தொடர்புத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 இதில் தமிழகத்தில் உள்ள 27 ஆயிரம் செல்லிடப்பேசி கோபுரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்ய வேண்டும்.  அவ்வாறு பதிவு செய்வதன் மூலம் தங்களது பகுதியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அளவு, கோபுரத்தை நிறுவிய நிறுவனங்களின் பெயரை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும் என தமிழ்நாடு தொலைத் தொடர்பு துறை கண்காணிப்பு பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com