போலீஸ் போல நடித்துப் பெண்களிடம் நகைப் பறிப்பு: மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கோவையில் போலீஸ் போல நடித்துப் பெண்களிடம் நகையை அபகரித்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர இளைஞர்கள் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் போலீஸ் போல நடித்துப் பெண்களிடம் நகையை அபகரித்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர இளைஞர்கள் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரின் பல பகுதிகளில் போலீஸ் என கூறி வட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் பெண்களிடம் நகைகளை அபகரித்துச் செல்வதாக மாநகரக் காவல் துறையினருக்குப் புகார்கள் வரத்தொடங்கின. இந்நிலையில், கோவை வெரைட்டிஹால் சாலை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் ஜனவரி 31-ஆம் தேதி காரில் வந்த ரமேஷ்குமாரை கத்தியைக் காட்டி மிரட்டி மர்ம நபர்கள் 2.5 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். 
இதுகுறித்து, தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இதில், மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தைச் சேர்ந்த யாசர் அலி (எ) யாசர் (47),  தகிஅலி (எ) தகி (43), பைரோஸ் அலிசையது (எ) பைரோஸ் (36), ஷாகித் அலி (28), சபீர் அலி (எ) சபீர் (32), அஸ்லாம் பிஜாத் ஜாபரி (எ) அஸ்லாம் (60), ராகேஷ் ரவீந்தர் சர்மா (எ) ராகேஷ் (27) ஆகிய 7 பேரையும் தனிப் படையினர் ஏற்கெனவே கைது செய்து, கோவை மத்தியச் சிறையில் 
அடைத்தனர்.  
மேலும், அவர்களிடமிருந்து 41.5 பவுன் நகை, கொள்ளைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.  இதேபோல, பல்வேறு பகுதிகளிலும் பெண்களிடம் நகையை அபகரித்துச் சென்ற பைரோஸ் அலி, ஷாகித் அலி, சபீர் அலி ஆகிய மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய காவல் ஆணையர் கு.பெரிய்யா உத்தரவிட்டார்.  இதையடுத்து, அந்த உத்தரவின் நகல், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பேரிடமும் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com