பிறமொழி திணிப்பை எதிர்த்து தமிழைக் காப்பாற்ற வேண்டும்: பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார்

பிற மொழி திணிப்பை எதிர்த்து தாய்மொழியான தமிழைக் காப்பாற்ற வேண்டும் என, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தெரிவித்தார்.

பிற மொழி திணிப்பை எதிர்த்து தாய்மொழியான தமிழைக் காப்பாற்ற வேண்டும் என, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தெரிவித்தார்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவு மாநாடு பொள்ளாச்சியில் திங்கள்கிழமை  நடைபெற்றது.  மொழிப்போர் தியாகியர் நினைவுக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள், இயக்கங்கள் கூட்டமைப்பாக பங்கேற்றன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் பேசியதாவது:
உலகத்தில்அவரவர் தம் தாய்மொழியைக் காப்பாற்றுவதற்காக ஆங்காங்கே போராட்டங்களும், அது சம்பந்தமான நிகழ்வுகளும் நடைபெற்று இருக்கின்றன. அந்தவகையில் 1965  பிப்ரவரி 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் 500-க்கும் அதிகமானோர் மொழியைக் காப்பாற்றவும், ஹிந்தி திணிப்பை எதிர்த்தும் போராடி உயிர்நீத்துள்ளனர்.  ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்ற மிகப்பெரிய படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அத்தகைய படுகொலையை நினைவு கூரத்தக்க வகையிலும், மொழி திணிப்பு இருக்கக் கூடாது என்பதற்காகவும், அவர்களுடைய நினைவை வெளிப்படுத்தக்கூடிய வகையிலும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. 
கல்வித் துறையில் ஆங்கிலம், வழிபாட்டில் வடமொழி ஆதிக்கம், ஆட்சித்
துறையிலும், அலுவலகங்களிலும் ஹிந்திஆதிக்கம், இசை அரங்கில் வேறுமொழி ஆட்சி செய்கிறது. இப்படி பல்வேறு வழியிலே மொழிகள் நம் தாய்மொழியான தமிழை அழித்துக் கொண்டிருக்கிறது. பலவகையிலும் திணிப்பு நடைபெற்றுகொண்டிருக்கிறது. வேறுமொழி திணிப்பை நாம் அனைவரும் எதிர்கொண்டு தாய் மொழியான தமிழைக் காக்கவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com