தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தக் கோரிக்கை

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 5,400-ஐ நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 5,400-ஐ நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எல்.செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பணி விதிகளை உடனடியாக வெளியிட வேண்டும். அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் தொடங்க வேண்டும். பெற்றோர்- ஆசிரியர் கழகத்தால் பணிபுரியும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 271 தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட 600 ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
மாற்றுப் பாடத்திட்டத்தில் உயர் கல்வி பயின்றவர்களுக்கு இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். தொழிற்கல்விஆசிரியர்களுக்கான குறைந்தபட் ஊதியமாக ரூ.4,800 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊதியத்தை ரூ.5,400 என வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநிலத் தலைவர் முருகேசன், மாநிலப் பொருளாளர் ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com